download 11 1
அரசியல்இலங்கைசெய்திகள்

மே தின பேரணிகளுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு!

Share

மே தின பேரணிகளுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு!

இன்றைய தினம் (01.05.2023) கொண்டாடப்படவுள்ள மே தினத்தை முன்னிட்டு தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பேரணிகளுக்காக விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அதன்படி, கொழும்பு, நுகேகொடை, கண்டி, ஹட்டன், பதுளை மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளில் விசேட மே தின பேரணிகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து குறித்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், கொழும்பில் மாத்திரம் 3,500க்கும் மேற்பட்ட பொலிஸார், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதாகவும் பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அதேநேரம், ஏனைய பகுதிகளில் முன்னெடுக்கப்படும் பேரணிகளுக்கான முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் முன்னெடுப்பதற்கான அறிவுறுத்தல்கள் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

 

பேரணிகள் நடத்தப்படும் பகுதிகளில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் கீழ் குறித்த பணிகள் கண்காணிக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், வீதியின் ஒரு மருங்கினை மாத்திரம் பயன்படுத்தி பேரணிகளை முன்னெடுக்குமாறு அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கத்தினரிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளதுள்ளனர்.

மேலும், மக்களை அசௌகரியத்திற்குள்ளாகும் வகையில், வாகனங்களைத் தரிப்பது மற்றும் ஏனைய முறையற்ற செயற்பாடுகளை முன்னெடுப்போருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...