கட்டாய கொவிட் தனிமைப்படுத்தலை இரத்து செய்வதாக சீன அரசாங்கம் அறிவித்ததை அடுத்து, சீனாவில் இருந்து வருபவர்கள் தொடர்பில் இலங்கை சுகாதார வழிகாட்டல்களை வெளியிட வாய்ப்புள்ளது.
“சீனாவில் இருந்து வருபவர்களுக்கு சுகாதார வழிகாட்டல்கள் வழங்கப்படலாம், ஆனால் அது கட்டாயமாக்கப்படாது” என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைகளால், பொருளாதாரத்தை பாதிக்கும் இவ்வாறான முடிவுகளை எடுக்க முடியாது எனவும், எனவே சுற்றுலா நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“கொவிட் சோதனைகள் கட்டாயமாக இருந்தபோதிலும், மக்கள் மீண்டும் பொது இடங்களில் முகக்கவசங்களை அணியச் செய்வதற்கான புதிய வழிகாட்டலை செயற்படுத்த ஒரு கோரிக்கை பெறப்பட்டுள்ளது,” என்றும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், மக்களை பீதியடைய வேண்டாம் என்றும், கொவிட் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முன்னர் செய்த சுகாதார வழிகாட்டல்களை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
#SriLankaNews
Leave a comment