இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் இலங்கை தமிழ் அகதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான பரிந்துரைகளை செய்வதற்கு ஒரு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவின் வழிகாட்டுதலின் கீழ் இழப்பீட்டு அலுவலகத்துடன் இணைந்ததாக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து தற்போது வருகை தரும் மற்றும் எதிர்காலத்தில் வருவதற்கு தீர்மானித்திருக்கும் இலங்கை அகதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அவசர வேலைத்திட்டமாக குழு அமைக்கப்பட்டுள்ளது.
நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேராவின் தலைமையிலேயே விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பும் நபர்களின் தேவையான ஆவணங்களை தாமதமின்றி பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளையும் இக்குழு மேற்கொள்ளும்.
#srilankanews
Leave a comment