25 678c45533b657
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காவல்துறை அதிகாரிகளின் சம்பளம் போதுமானதாக இல்லை: 10,000 புதிய அதிகாரிகளை நியமிக்க IG பிரியந்த வீரசூரிய திட்டம்!

Share

காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் தற்போதைய சம்பளம், அவர்கள் செய்யும் அர்ப்பணிப்பு மற்றும் சேவைக்கு போதுமானதாக இல்லை என காவல்துறை மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

காவல்துறை குற்ற அறிக்கை பிரிவில் இன்று (30) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர், அதிகாரிகளின் சம்பளப் பிரச்சினை குறித்து அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆராய விசேட அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவிற்கு காவல்துறை திணைக்களம் சார்பாகத் தேவையான ஆலோசனைகள் மற்றும் யோசனைகள் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சாதகமான தீர்வு எட்டப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

காவல்துறை திணைக்களத்தில் நிலவும் மனிதவளப் பற்றாக்குறை குறித்து அதிர்ச்சியான தகவல்களை அவர் வெளியிட்டார்.

தற்போது இலங்கை காவல்துறையில் சுமார் 32,000 அதிகாரிகளுக்கு வெற்றிடம் நிலவுகிறது. இந்த வருடத்தில் 2,500 பேரும், அடுத்த வருடத்தில் 2,700 பேரும் ஓய்வு பெறவுள்ளனர். இவர்களின் ஓய்வைத் தடுக்க முடியாது என்பதால் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

இந்தச் சவாலை எதிர்கொள்ளும் வகையில், எதிர்காலத்தில் காவல்துறையில் புதிதாக 10,000 பேரைச் சேவையில் உள்வாங்குவதற்கான துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகக் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய இதன்போது சுட்டிக்காட்டினார்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...