மொட்டு அரசு
அரசியல்இலங்கைசெய்திகள்

‘மொட்டு’ அரசிலிருந்து வெளியேற சிலர் அதிரடி முடிவு!

Share

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் அதிருப்தி அடைந்துள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிலர், முக்கியமான தருணத்தில் அரசிலிருந்து விலகவுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆட்சியின் கீழ் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகள் பகிரப்பட்ட விதம் தொடர்பாக இவர்கள் ஆரம்பத்தில் இருந்தே அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இதன் பின்னர் அரசு பின்பற்றிய கொள்கை தொடர்பாகவும் இவர்களுக்கு அதிருப்தி இருந்து வந்துள்ளது.

இந்தநிலையில், அண்மைக்காலமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இவர்களின் அதிருப்தியை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது எனவும் கூறப்படுகின்றது.

அதேவேளை, அரசில் அங்கம் வகிக்கும் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக இயங்க முடிவு செய்துள்ளனர். இவர்கள் அடுத்த வாரம் ஜனாதிபதியைச் சந்தித்து தமது முடிவு குறித்து ஜனாதிபதி அறிவிக்கத் திட்டமிட்டுள்ளது எனவும் தெரியவருகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
manokanesan
இலங்கை

அரசை வீட்டிற்கு அனுப்புவோம் – மனோ கணேசன் சூளுரை.

“நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் அரசு செயற்படக் கூடாது எனவும் 2029ஆம் ஆண்டு...

thadampuralvu
இலங்கை

மீண்டும் தடம் புரண்டது 1164 இலக்க தொடருந்து.

சற்றுமுன்னர் கொழும்பு- கோட்டை தொடருந்து நிலையத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டுள்ளதாள், தொடருந்து நிலையத்தின் இரண்டு மேடைகளின்...

train
இலங்கை

புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு.

நேற்று மாலை, கொழும்பு, பம்பலப்பிட்டி தொடரூந்து நிலையத்திற்கு அருகில் தொடரூந்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக...

dengu 19
இலங்கை

டெங்கு நோயாளிகளுக்கு மற்றுமொரு வைரசாலும் ஆபத்து – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நேற்றைய தினம் 2,652 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், நாட்டில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு...