tamilni 235 scaled
இலங்கைசெய்திகள்

நீதிபதி இளஞ்செழியனின் தாயாரது உடல் கண்ணீர் காணிக்கையுடன் தீயில் சங்கமம்

Share

நீதிபதி இளஞ்செழியனின் தாயாரது உடல் கண்ணீர் காணிக்கையுடன் தீயில் சங்கமம்

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் தாயார் சிவபாக்கியம் மாணிக்கவாசகரின்(வயது 86) உடல் ஊர்மக்களின் கண்ணீர் காணிக்கையுடன் தீயில் சங்கமித்துள்ளது.

வேலணை மண்ணில் பிறந்து, வேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியை பயின்று, வேலணை மத்திய கல்லூரியில் உயர் கல்வியை கற்று, ஆசிரியராக வேலணை கிழக்கு மகா. வித்தியாலயத்தில் நியமனம் பெற்று அதிபராக அதே பாடசாலையில் பதவி உயர்வு பெற்று 35 ஆண்டுகள் கல்வி பணியை நிறைவேற்றிய அமரர் ஓய்வு நிலை அதிபர் சிவபாக்கியம் மாணிக்கவாசகரின் இழப்பு பேரிழப்பு என அன்னாரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

அமரர், 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனைகளை நிலைநாட்டியவர். வேலணை மண்ணின் மாணவ செல்வங்களை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைய செய்து யாழின் பிரபல பாடசாலைகளில் அனுமதி கிடைக்க வழி செய்தவர்.

14.09.2023 இயற்கையெய்திய அமரர் இரண்டு நாட்கள் கொழும்பில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டபோது, நீதிபதிகள், சட்டமா அதிபர்கள், அரச வைத்தியர்கள், ஜனாதிபதி சட்டத்தரணிகள், சட்டத்தரணிகள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

17.09.2023 இரண்டு நாட்கள் அன்னார் யாழ்ப்பாணத்தில் அஞ்சலிக்காக வைத்தபோது நீதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டத்தரணிகள், பல்கலைக்கழக சமூகம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

18.09.2023 இறுதிக்கிரியைகள் இடம்பெற்று அன்னார் பிறந்த மண்ணில் வேலணை கிழக்கு மக வித்தியாலயம் முன்பாக அமரரின் ஊர்தி சென்ற போது பாடசாலை மாணவிகள் பூச்சரங்கள் இட்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

அன்னாரின் பூர்வீக வீட்டில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் முக்கியஸ்தர்களால் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மற்றும் உடற்கல்வி துறை சிரேஷ்ட விரிவுரையாளர் இளம்பிறையன் ஆகியோரின் தாயாரான சிவபாக்கியம் மாணிக்கவாசகர் வேலணை சாட்டி மயானத்தில் அக்கினியில் ஊர்மக்களின் கண்ணீர் காணிக்கையுடன் சங்கமித்தார்.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...