Supermarket Prices Trade Goods 02
இலங்கைசெய்திகள்

அத்தியாவசியப் பொருட்களுக்கும் விரைவில் தட்டுப்பாடு!!!

Share

அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வது தடைபடும் என அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்தது.

திறந்த கணக்கு முறையின் கீழ் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பம் அடுத்த மாதம் முதல் கிடைக்காவிட்டால் பண்டிகைக் காலத்தில் இந்த நிலைமை ஏற்படும் என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதன் காரணமாக கடந்த இரண்டு மாதங்களில் சந்தையில் பொருட்களின் விலை சற்று குறைந்துள்ளதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.

திறந்த கணக்கு முறையானது இரண்டு மாதங்களுக்கு மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும், அடுத்த மாதம் முதல் காலாவதியாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

எனவே, திறந்த கணக்கு முறை நீடிக்கப்படாவிட்டால் பிரச்சினை ஏற்படும் என்றும் அதன் பின்னர் இறக்குமதி செய்வதற்கு போதுமான அந்நிய செலாவணி வங்கிகளிடம் இல்லை என்றும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

death body
இலங்கை

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பட்டதாரி இளைஞர் பலி!

காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப்...

சுகீஸ்வர பண்டார 1
இலங்கை

இன்றைய நாளில் சுகீஸ்வர பண்டாரவிற்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்...