tamilni 2 scaled
இந்தியாஇலங்கைசெய்திகள்

இலங்கைக்கு கொண்டுவரப்படும் சாந்தனின் பூதவுடல்

Share

இலங்கைக்கு கொண்டுவரப்படும் சாந்தனின் பூதவுடல்

சென்னையிலிருந்து சாந்தனின் பூதவுடல் சிறப்பு விமானத்தின் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் எமது செய்தி சேவை அவரை தொடர்புகொண்டு கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் கூறுகையில்,”இன்றையதினம் சென்னையிலிருந்து காலை 9.40 மணிக்கு இலங்கை நோக்கி புறப்படும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் சிறப்பு விமானம் மூலம் சாந்தனின் பூதவுடல் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது.

சாந்தனின் பூதவுடலை இலங்கைக்கு அனுப்புவதில் பெரும் சிக்கல்கள் காணப்பட்டன.

இதற்கான அனைத்து அனுமதிகளும் பெரும் சிரமத்தின் மத்தியில் நேற்று(29.02.2024) பெற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த விமானத்தில் நானும் இலங்கை வரவிருக்கின்றேன்.இதேவேளை மீண்டும் இந்தியா செல்வது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை.”‘என கூறியுள்ளார்.

தமிழக அரசு சாந்தனின் பூதவுடலை கொண்டு செல்வதற்கான அனுமதிகளை பெற்றுக்கொள்வதற்கு ஒத்துழைப்பு மட்டுமே வழங்கியுள்ளது.

அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தனிப்பட்ட முறையில் சாந்தனின் குடும்பத்தாரால் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Share
தொடர்புடையது
சீரற்ற காலநிலை
இலங்கை

காலநிலை தாக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அதிகரிப்பு – துரித கதியில் இடம்பெறும் சீரமைப்பு பணிகள்.

தற்போது நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 ஆயிரத்து...

கைக்குண்டுகள்
இலங்கை

இரத்மலானை பகுதியில் வீட்டின் மேல் வீசப்பட்ட கைக்குண்டுகள்.

இரத்மலானை ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...