01 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அதிக விலைக்கு முட்டை விற்பனை! – யாழில் சட்ட நடவடிக்கை

Share

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு எதிராக யாழ்.மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோழி முட்டைகளுக்கான கட்டுப்பாட்டு விலை வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் வெள்ளை நிற முட்டை 43 ரூபாவும், பழுப்பு நிற முட்டை 45 ரூபாவுக்கு விற்பனை செய்ய நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் முட்டைகளின் விலைகளை கட்டுப்பாட்டு விலைக்குள் விற்காது அதிக விலைக்கு வர்த்தகர்கள் விற்பனை செய்வதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் , யாழ். மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினர் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், திருநெல்வேலி, கல்வியங்காடு போன்ற பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

அதன் போது, அதிக விலைக்கு கோழி முட்டை விற்பனை செய்த மூன்று வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் , எதிர்வரும் காலங்களில் வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என யாழ்.மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...