24 660c139ab5fd6
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஓர் அரிய சந்தர்ப்பம்!

Share

இலங்கையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஓர் அரிய சந்தர்ப்பம்!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சதொச கிளைகளிலும் இன்றையதினம் (02-04-2024) முதல் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணப் பொதி ஒன்றை கொள்வனவு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் எதிர்வரும் சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

4,500 ரூபா பெறுமதியான 11 உணவுப் பொருட்கள் அடங்கிய இந்த நிவாரணப் பொதியை 3,420 ரூபா என்ற சில்லறை விலையில் கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை சதொச தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், சதொச நிறுவனம் இன்று முதல் ஒரு முட்டையை 36 ரூபா என்ற சில்லறை விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

Share
தொடர்புடையது
சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள்
இலங்கை

சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள்.

  இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஏழு ஆண்டுகளில் சுமார் 1,178 கைதிகள்...

இலங்கை வியட்நாம் விமான சேவை
இலங்கை

ஆரம்பமானது இலங்கை – வியட்நாம் விமான சேவைகள்!

வியட்நாமிற்கும், இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து, வியட்நாம் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான...

Veterinary Officer
இலங்கை

தொடரும் கால்நடை வைத்தியர்களின் தொடரும் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை!!

வனஜீவராசிகள் திணைக்கள கால்நடை வைத்தியர்கள் ஆரம்பித்துள்ள சட்டப்படி பணி செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, அவசர...

anura kumara 1
இலங்கை

பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் – ஜனாதிபதியின் அதிரடி முடிவு!

  நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி அநுர...