இலங்கை வியட்நாம் விமான சேவை
இலங்கை

ஆரம்பமானது இலங்கை – வியட்நாம் விமான சேவைகள்!

Share

வியட்நாமிற்கும், இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து, வியட்நாம் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான முதலாவது விமானம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

குறித்த விமானமானது, வியட்நாமின் ஹோ சி மின் நகரத்திலிருந்து வருகை தந்த VN-671 என்ற இலக்கத்தைக் கொண்ட இந்த எயார்பஸ் A-320 ரக விமானம் நேற்று (16) இரவு 11.02 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளது.

இதற்கு பாரம்பரிய நீர் தாரை மரியாதை செலுத்தப்பட்டு அமோக வரவேற்பளிக்கப்பட்டதுடன், முதலாவது விமானப் பயணத்தின் மூலம் 164 பயணிகள் சென்றுள்ளனர்.

மேலும், அதே விமானத்தில் 172 பயணிகள் மீண்டும் வியட்நாம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

மேற்படி, நேரடி விமான சேவையின் கீழ் வாரத்தில் 03 நாட்கள், குறிப்பாக ஞாயிறு, புதன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் கட்டுநாயக்கவிற்கும் வியட்நாமிற்கும் இடையில் விமானப் பயணங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த பயணத்திற்கு 04 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் எடுக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

 

Share
தொடர்புடையது
ginger
இலங்கை

இஞ்சி செய்கையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

ஏற்றுமதி விவசாயத் திணைக்களம், இஞ்சி அழுகல் நோய் குறித்துக் கவனம் செலுத்துமாறு விவசாயிகளுக்கு அறிவித்துள்ளது. குறிப்பாக...

Valikamam Land Release
இலங்கை

காணிவிடுவிப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட ஈ.பி.டி.பி கட்சியின் உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு!

பலாலி காணி விடுவிப்பு போராட்டத்தில் கலந்துகொண்டமை தொடர்பில், ஈ.பி.டி.பி கட்சியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர்...

Colombo Hotel
இலங்கை

பட்டப்பகலில் நடத்தப்பட்ட கைவரிசை – போலி ஆசாமி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள்!

கடந்த 3 ஆம் திகதி, கொழும்பு – கம்பெனி வீதி பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு...

Cid Investigations 1
இலங்கை

கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரம் – தலையிடுகிறதா CID!

அண்மைய நாட்களாக மிகப்பெரிய அளவிலான பேசுபொருளாக காணப்பட்ட கல்முனை ஆதார வைத்தியசாலை முஸ்லிம் பெண்களினுடைய ஆடை...