sampanthan 1
அரசியல்இலங்கைசெய்திகள்

மக்கள் நலன் கருதிச் செயற்படுங்கள்! – அரசிடம் சம்பந்தன் வலியுறுத்து

Share

“நாடு இக்கட்டான நிலையில் இருக்கும்போது இலங்கை அரசு தனது சுயலாப அரசியலைக் கைவிட்டு மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு செயற்பட வேண்டும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத் தமிழர்களுக்கு உதவுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சியை வரவேற்பதாகவும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“தமிழக முதலமைச்சரின் இந்த நல்ல முயற்சியை வரவேற்கின்றோம். அதேபோல் இந்திய மத்திய அரசும் இக்கட்டான நெருக்கடி நிலைமையில் இலங்கைக்கு உதவவேண்டும். முழு அளவிலான உதவிகளை இந்தியா தொடர்ந்து வழங்கவேண்டும்.

அதேவேளை, இந்திய அரசின் வேண்டுகோள்கள் தொடர்பில் இலங்கை அரசு கவனம் செலுத்தவேண்டும். நாடு இக்கட்டான நிலையில் இருக்கும்போது இலங்கை அரசு தனது சுயலாப அரசியலைக் கைவிட்டு மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு செயற்பட வேண்டும்.

தமிழகத்தினதும், இந்தியாவினதும் முழுமையான பங்களிப்பு தமிழ் மக்கள் நலன் சார்ந்த விடயங்களிலும், இலங்கையின் தேசிய மட்டத்திலும் தொடரவேண்டும்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1727675975 2112027 hirunews
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையில் மாறும் அரசியல் களம்: ரணில் – சஜித் கூட்டணிப் பேச்சுவார்த்தை மற்றும் மொட்டுக் கட்சியில் மீண்டும் இணையும் முன்னாள் அமைச்சர்கள்!

இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகளுக்கு இடையே புதிய கூட்டணிகள் மற்றும் மீள்-இணைவுகள் குறித்த அதிரடி நகர்வுகள்...

23482512 vijay0
செய்திகள்இந்தியா

யாருடைய அழுத்தத்திற்கும் பணியமாட்டேன்: மாமல்லபுரத்தில் தவெக தலைவர் விஜய் ஆவேச உரை!

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) செயல்வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் இன்று...

1769314931 IMG 20260125 WA0005
செய்திகள்இலங்கை

புதிய சட்ட வரைபும் ஒரு அடக்குமுறை கருவியே: பயங்கரவாத தடைச் சட்டம் குறித்து அம்பிகா சற்குணநாதன் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு (PTA) பதிலாக அறிமுகப்படுத்தப்படவுள்ள “அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும்...

image 1
செய்திகள்இலங்கை

மதங்களையும் கலாச்சாரத்தையும் அழிக்கத் துணியும் அரசு: அமைச்சர் லால்காந்தவின் பேச்சால் சீறிய நாமல்!

தற்போதைய அரசாங்கம் தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக நாட்டின் கலாச்சாரம் மற்றும் மதங்களுக்கு எதிராகச் செயல்படத்...