20 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான தனிநபர் சட்டமூலத்தை முன்வைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஜக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஒன்று கூடிய ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல மணிநேர கூட்டத்தில் பங்குபற்றியிருந்தனர்.
இதன் பின் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த எதிர்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல,
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்னெடுத்துச் செல்வதற்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சில பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்று அங்கீகாரம் பெறுவதற்கும் நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விரைவில் ஏனைய கட்சிகளின் எம்.பி.க்களை சந்தித்து அவர்களின் ஆதரவைப் பெறுவார்.
சில பொதுஜன பெரமுன எம்.பி.க்கள் மற்றும் சுயேச்சையாக மாறத் தீர்மானித்தவர்களின் ஆதரவைத் திரட்ட முயற்சிப்பதால் எண்ணிக்கையில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
ஜனாதிபதியின் அதிகாரங்களை நீக்கும் வகையில் அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரப்படும் என்றார்.
#SrilankaNews
Leave a comment