rtjyc scaled
இலங்கைசெய்திகள்

யாழில் விபத்தில் சிக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

Share

யாழில் விபத்தில் சிக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவு திடீரென திறக்கப்பட்ட நிலையில், வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மோதுண்டு விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி உப்புமடம் பகுதியில் இன்று (04.10.2023) இரவு 9 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சுன்னாகத்தைச் சேர்ந்த மேசன் தொழிலாளியான லோகராசா தர்சன் என்ற குடும்பத்தலைவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார் உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் விபத்துக்கு காரணமான காரினை அங்கிருந்து எடுத்து செல்ல முற்பட்ட போது அப்பகுதியில் கூடியவர்கள் பொலிஸாருடன் முரண்பட்டனர்.

உரிய விசாரணைகள் இடம்பெறாது சடலத்தை அப்புறப்படுத்தியதுடன் விபத்துக்கு காரணமான காரினை பொலிஸார் எடுத்துச் செல்வதை அனுமதிக்க முடியாது என அவர்கள் தெரிவித்தனர்.

அதனால் அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது. அத்துடன், காரின் சாரதி பொலிஸில் சரண்டைந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....

dead body 3
இலங்கை

வயோதிப பெண் மரணம் – தொடரும் தீவிர விசாரணைகள்.

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக...

Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...