ஜனாதிபதி தேர்தலை குறிவைத்து அதிகரிக்கும் பொருட்களின் விலை
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தலை குறிவைத்து அதிகரிக்கும் பொருட்களின் விலை

Share

ஜனாதிபதி தேர்தலை குறிவைத்து அதிகரிக்கும் பொருட்களின் விலை

கோதுமை மாவின் விலை அதிகரிக்க வேண்டிய காரணம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க விளக்கமளித்துள்ளார்.

அதன்படி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பெருமளவு நிதி திரட்டவே பிரீமா நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் (19) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “உலகச் சந்தையில் கோதுமை மா குறைந்து, கோதுமை தானியங்கள் குறைந்து, டொலரின் மதிப்பு குறைந்து வரும் நிலையில், அந்தச் சாதகத்தை நுகர்வோருக்கு மா நிறுவனங்கள் வழங்குவதில்லை.

ஜனாதிபதித் தேர்தலின்போது இந்த மக்களின் பணத்தில் நிதியளிப்பதை நான் அறிவேன்.

எனவே, இந்த நிறுவனங்களுக்கு வேறு வழிகளில் பணம் சம்பாதிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவே ஒருமித்த கருத்து.

ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலிலும் பணத்தை கொடுத்தவர்கள் இவர்கள்தான். பிரீமா நிறுவனம். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு நிதி திரட்ட வேண்டியதன் காரணமாக அதிக விலைக்கு மாவினை பாவனையாவார்களுக்கு வழங்க முயற்சிக்கின்றனர்.

இதற்குப் பதில் அளிப்பது பிரதமருக்கும், அவைத் தலைவருக்கும் கடினம் என்பதை நான் அறிவேன்.

நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்வியொன்றை எழுப்பியே அநுர குமார் திசாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...