இலங்கையின் கடவுச்சீட்டு பிடித்துள்ள இடம்
இலங்கைசெய்திகள்

இலங்கையின் கடவுச்சீட்டு பிடித்துள்ள இடம்

Share

இலங்கையின் கடவுச்சீட்டு பிடித்துள்ள இடம்

2023ஆம் ஆண்டுக்கான உலகின் பலமான அல்லது சிறந்த கடவுச்சீட்டு கொண்ட நாடுகளின் தரவரிசையில் இலங்கை முன்னேறியுள்ளது.

சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் உத்தியோகப்பூர்வ தரவுகளின் அடிப்படையில் Henley Passport Index நிறுவனம் மேற்கொண்டுள்ள தரப்படுத்தலில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அதன்படி இலங்கையின் கடவுச்சீட்டு கடந்த வருடத்தில் இருந்து எட்டு இடங்கள் முன்னேறி 95ஆவது இடத்தைப் பெற்றுள்ளதாக குறித்த தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கடவுச்சீட்டினை பயன்படுத்தி விசா இல்லாமலோ அல்லது ஒன் – அரைவல் விசா மூலமோ 41 நாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்ள முடியும் என்ற அடிப்படையில், தரவரிசையில் இலங்கை முன்னேறியுள்ளது.

சிங்கப்பூர், மாலைதீவு, பாகிஸ்தான், நேபாளம், கம்போடியா, லாவோஸ், தஜிகிஸ்தான், பஹாமாஸ், டொமினிக்கா, மடகாஸ்கர் மற்றும் சீஷெல்ஸ் உள்ளிட்ட 41 நாடுகளுக்கு இலங்கை இந்த வசதியை வழங்கியுள்ளது.

இதேவேளை 57 இடங்களுக்கு விசா இல்லாத அணுகலை வழங்கும் இந்திய கடவுசீட்டு ஐந்து இடங்கள் முன்னேறி 80 வது இடத்தைப் பிடித்துள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன் ஐந்து ஆண்டுகளாக முதலிடத்தை தக்கவைத்திருந்த ஜப்பான், முதல் முறையாக 3ஆவது இடத்திற்கு தரமிறங்கியுள்ள நிலையில் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த கடவுசீட்டை கொண்ட நாடாக சிங்கப்பூர் மாறியுள்ளது.

மேலும் ஆப்கானிஸ்தான் இந்த தரவின் அடிப்படையில் இறுதி இடத்தை பிடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

death body
இலங்கை

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பட்டதாரி இளைஞர் பலி!

காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப்...

சுகீஸ்வர பண்டார 1
இலங்கை

இன்றைய நாளில் சுகீஸ்வர பண்டாரவிற்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்...