2 51
இலங்கைசெய்திகள்

மின் கட்டண குறைப்பு : பொதுமக்களுக்கான சலுகைகள் குறித்து கலந்துரையாடல்

Share

மின்கட்டண திருத்தம் தொடர்பில் எதிர்வரும் 31 ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

திருத்தப்பட்ட மின்சாரக் கட்டணச் சலுகையை பொதுமக்கள் முறையாகப் பெறுகிறார்களா என்பது குறித்து ஆராய்வதற்காக இந்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கை வர்த்தக சபை, வர்த்தக மற்றும் தொழில்துறை சபைகளின் கூட்டமைப்பு, இலங்கை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம், இலங்கை தேசிய தொழில்துறை சபை, கட்டுமான தொழில் சபை மற்றும் கூட்டு ஆடை சங்கங்கள் மன்றம் ஆகியவை கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் நிறுவன தொடர்பாடல் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் (Jayanath Herath) தெரிவித்தார்.

கடந்த 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அடுத்த 6 மாதங்களுக்கு மின்சாரக் கட்டணத்தை 20 சதவீதம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, 0-30 வரையிலான வீட்டுப் பிரிவிற்கான அலகுக்கான கட்டணத்தை 6 ரூபாவிலிருந்து 4 ரூபாவாகவும், 31-60 வரையிலான பிரிவிற்கான அலகுக் கட்டணத்தை 9 ரூபாவிலிருந்து 6 ரூபாவாகவும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், வீட்டுப் பிரிவிற்கு 20 சதவீதமும், மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு 21 சதவீதமும், ஹோட்டல்களுக்கு 31 சதவீதமும், தொழில்துறை துறைக்கு 30 சதவீதமும், பொதுத்துறைக்கு 12 சதவீதமும் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்பட்டன.

அத்துடன் அரச நிறுவனங்கள் மற்றும் தெருவிளக்குகளுக்கான கட்டணங்களை 11 சதவீதம் குறைக்க பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...

Cheated
இலங்கை

பேஸ்புக் ஊடாக இடம்பெற்ற கோடிக்கணக்கான பண மோசடி!

  இலங்கையில் பேஸ்புக் ஊடாக மக்களை ஏமாற்றிய நபர் தொடர்பான முறைப்பாடுகளை மிரிஹான விசேட குற்றப்...

Cid Investigations
இலங்கை

உயர்தர பரீட்சை மோசடிகள் – ஆரம்பிக்கப்பட்டது குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை.

அண்மையில், அம்பாந்தோட்டைபகுதியில் உயர்தர பரீட்சை வினாத்தாள் ஒருங்கிணைப்பு மையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வினாத்தாள் முறைகேடுகள் குறித்து...

Dora
இலங்கை

அங்குலான கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகிலிருந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்.

அங்குலானவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் கடற்படைக்குச் சொந்தமான டோரா படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில்...