அரச ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை 65 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு மீள் பரீசிலனை செய்யப்பட வேண்டும் என்று அரச பங்காளிக்கட்சியான இலங்கை கம்யூனிஸ் கட்சி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத்திட்ட உரைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க, இந்த யோசனையை முன்வைத்தார்.
அரச ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை 65 ஆக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அது கட்டாயமாக்கப்படக்கூடாது. 60 வயதுக்கு மேல் எப்போதும் ஓய்வுபெறலாம் என்ற ஏற்பாடு இடம்பெறவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் வீண் பிரச்சினை உருவாகும்.
அதேபோல அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படவில்லை. தற்போதைய சூழ்நிலையில் அதனை செய்வது கடினம். எனினும், கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே அதனை செய்யுமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.”- என்றார்.
#SrilankaNews