li
இலங்கைசெய்திகள்

குறைக்கப்பட்டன எரிவாயு விலைகள்

Share

தற்போது நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகிய அத்தியாவசிய பொருட்களின் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

இது தற்போது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 75 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலையான 2,750 இலிருந்து 2675 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 30 ரூபாவாலும் 2.5. கிலோ கிராம் சிலிண்டரின் விலை 14 ரூபாவாலும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை புதிய விலை 1071 ரூபாவாகவும் 2.5 கிலோ கிராம் சிலிண்டரின் புதிய விலை 506 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...