கொடிகாமத்தில் வெடிபொருள்கள் மீட்பு!
யாழ்.வரணி குடமியன் பகுதியில் உரப்பையில் சுற்றப்பட்ட நிலையில் வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிஸார் மற்றும் படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தனியார் தோட்டக் காணி ஒன்றில் மர்மப் பொருள்கள் காணப்படுகின்றன என பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்தே அங்கு சென்ற பொலிஸார் குண்டு செயலிழக்க வைக்கும் படையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
குறித்த வெடிபொருள்கள் மேல் கப்டன் 99 தகர்ப்பு வெடிமருந்து என பெயரிடப்பட்டுள்ளது. அத்துடன் அதில் சில எழுத்துக்கள் அழிவடைந்தும் காணப்படுகின்றன என தெரிவிக்கப்படுகிறது.
இந்த வெடிபொருள்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் பாவனையில் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
Leave a comment