” ராஜபக்ச அரசை விரட்டுவதற்காக எந்தவொரு தரப்புடனும் இணைந்து செயற்படுவதற்கு தயார்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
மொனறாகலையில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணையும், அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையும் நிச்சயம் முன்வைக்கப்படும். அதன்பின்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ராஜபக்ச ஆட்சியை விரட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
ராஜபக்சக்கள் நாட்டைவிட்டு, வெளியேறுவதை தடுக்க மக்கள் நீதிமன்றத்தை நாடுவார்கள். கப்ரால் வெளியேறுவதை தடுப்பதற்கு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.” – என்றார்.
#SriLankaNews
Leave a comment