7 54
இலங்கைசெய்திகள்

மீண்டும் ஆபத்தில் சிக்க போகும் இலங்கை : நாட்டை மீட்க தயாராக ரணில்

Share

மீண்டும் ஆபத்தில் சிக்க போகும் இலங்கை : நாட்டை மீட்க தயாராக ரணில்

இலங்கைக்கு ஆபத்து ஏற்பட்டால் அதிலிருந்து மீட்பதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) ஆயத்தமாக இருக்கின்றார் என முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன(Vajira Abeywardena) தெரிவித்துள்ளார்.

அனுபவம் இல்லாதவர்களிடம் நாட்டை ஒப்படைக்க, மக்கள் எடுத்த தீர்மானத்தினால் இன்று அவர்கள் பெரும் நெருக்கடி நிலையை எதிர்நோக்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் தீர்வு வழங்கப்பட முடியாது காணப்படும் அரசி மற்றும் தேங்காய் தட்டுப்பாட்டு பிரச்சினைகள், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் இருந்தபோது இருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த காலத்தில் அரிசிக்கான தட்டுப்பாடு இருக்கவில்லை எனவும் இலவசமாக மக்களுக்கு 20 கிலோ கிராம் எடையினுடைய அரிசி விநியோகம் செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பல ஆயிரக் கணக்கான தொன் எடையுடைய அரிசி விநியோகம் செய்யப்பட்டதாகவும் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை ஆபத்து ஏற்பட்டால் அதிகாரம் இருந்தாலும் அதிகாரம் இல்லை என்றாலும் உதவுவதற்கு ரணில் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Jeevan
செய்திகள்அரசியல்இலங்கை

தனிப்பட்ட விமர்சனங்களை நிறுத்துங்கள் – NPP உறுப்பினர்களுக்கு ஜீவன் தொண்டமான் நேரடி எச்சரிக்கை!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், தன்னைத் தனிப்பட்ட ரீதியில் விமர்சிப்பதைக் கைவிட்டு,...

image 2026 01 fb5c343d199f4dadd432e5fe9ea35263 1200x675 1
உலகம்செய்திகள்

தற்போதைய ஆண்டு எது என்பதில் கூகுள் AI குழப்பம்; ஈலான் மஸ்க் விமர்சனம்!

புத்தாண்டு பிறந்து ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், தற்போதைய ஆண்டு எது என்பது குறித்த தெளிவின்றி...

MATHUGAMA 5
செய்திகள்இலங்கை

மத்துகம பிரதேச சபைத் தவிசாளர் கசுன் முனசிங்க பிணையில் விடுதலை!

மத்துகம பிரதேச சபையின் செயலாளரைத் தாக்கியமை மற்றும் அவரது கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில்...

images 17
செய்திகள்இலங்கை

பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டம்: வடக்கு நில விடுவிப்பு மற்றும் ஒலுவில் துறைமுக ஆய்வுக்கு ஜனாதிபதி உத்தரவு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் 10 ஆவது நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்...