Jeevan
செய்திகள்அரசியல்இலங்கை

தனிப்பட்ட விமர்சனங்களை நிறுத்துங்கள் – NPP உறுப்பினர்களுக்கு ஜீவன் தொண்டமான் நேரடி எச்சரிக்கை!

Share

தேசிய மக்கள் சக்தியின் (NPP) சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், தன்னைத் தனிப்பட்ட ரீதியில் விமர்சிப்பதைக் கைவிட்டு, ஆக்கபூர்வமாகச் செயற்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற மரபுகள் மற்றும் கண்ணியம் குறித்து அந்தத் தரப்பின் மேல்மட்ட உறுப்பினர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.

“எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நாடாளுமன்றில் பேசுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். என்னை விமர்சிப்பதால் மலையக மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை,” என அவர் காட்டமாகத் தெரிவித்தார்.

மலையகத்தில் உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றும் போது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எவ்விடத்திலும் தேசிய மக்கள் சக்தியைக் கைவிடவில்லை என்பதை அவர் நினைவுபடுத்தினார்.

தேசிய மக்கள் சக்தி மீது நாட்டின் பெரும்பான்மை மக்கள் நம்பிக்கை வைத்துள்ள காரணத்தினாலேயே, தாம் அந்தத் தரப்பிற்கு ஆதரவு வழங்கியதாக அவர் விளக்கமளித்தார்.

கூட்டணி மற்றும் ஒத்துழைப்பு அரசியல் சூழலில், ஒருவரையொருவர் சேறு பூசுவதை விடுத்து, மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் கவனம் செலுத்துமாறு தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...