MATHUGAMA 5
செய்திகள்இலங்கை

மத்துகம பிரதேச சபைத் தவிசாளர் கசுன் முனசிங்க பிணையில் விடுதலை!

Share

மத்துகம பிரதேச சபையின் செயலாளரைத் தாக்கியமை மற்றும் அவரது கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அச்சபையின் தவிசாளர் கசுன் முனசிங்க, இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மத்துகம பிரதான நீதவான் M.N.M. நாணயக்கார முன்னிலையில் இன்று (08) இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சந்தேகநபரான தவிசாளரை தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீதவான் அனுமதி வழங்கினார்.

வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தொடருமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டது. மத்துகம பிரதேச சபையின் செயலாளர், தவிசாளர் தன்னைத் தாக்கியதுடன் கடமைக்குத் தடையாக இருந்ததாகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில், கடந்த ஜனவரி 02 ஆம் திகதி தவிசாளர் கசுன் முனசிங்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், இன்று வரை (ஜனவரி 08) விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...