24 65fbb007e476d
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணிலை தோற்கடிக்க பசில் வகுத்துள்ள சூழ்ச்சி

Share

ரணிலை தோற்கடிக்க பசில் வகுத்துள்ள சூழ்ச்சி

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை கைப்பற்றி வரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகளை தோற்கடிக்க இன்றைய மே தினத்தை தீர்க்கமான நாளாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட பொதுஜன பெரமுன தலைவர்கள் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் முன்னாள் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனால் ஐக்கிய தேசியக் கட்சியை மிஞ்சும் வகையில் மே தினப் பிரச்சாரத்தை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கவும், மே தினக் கூட்டங்களில் அதிகபட்சமான கட்சி உறுப்பினர்களை பங்கேற்கச் செய்யவும் இரண்டு அடிப்படை கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகளுக்காக உள்ளுராட்சி தலைவர்களுக்கு பெருமளவு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தாமரை மொட்டு அலங்காரத்தை நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியை மிஞ்சும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு தேவையான சகல பணமும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கட்சியினரை மே பேரணியில் பங்கேற்க வைப்பதற்கு தேவையான பணமும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிப்பதற்கு பசில் ராஜபக்சவும் நாமல் ராஜபக்சவும் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...