ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அவர் தலைமையிலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இலங்கையில் நடைபெறும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து, சர்வதேச தொழிலாளர் தினமான நேற்றுமுன்தினமும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களால் பல இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
வாஷிங்டன், நிவ்யோர்க், நெப்பிராஸ்கா, விஸ்கொன்சின், அயோவா,ஓக்லஹோமா, நியூ மெக்ஸிகோ, கென்டக்கி, அரிசோனா சென் பிரான்சிஸ்கோ, லொஸ் ஏஞ்சல்ஸ், ஒரிகன் ஆகிய பிராந்தியங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இதற்கும் மேலதிகமாக நியூசிலாந்து, ஒக்லன்ட், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
#SriLankaNews
Leave a comment