tamilni 113 scaled
இலங்கைசெய்திகள்

தனியார் பேருந்து முறைக்கேடுகளை அறிவிக்க புதிய வசதி

Share

தனியார் பேருந்து முறைக்கேடுகளை அறிவிக்க புதிய வசதி

தனியார் பேருந்துகளில் இடம்பெறும் பல்வேறு அநாகரீகமான பிரச்சினைகளை கருத்திற் கொண்டு, இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் பயணிகள் தமது முறைப்பாடுகளை உடனடியாக தெரிவிக்கும் வகையில் ‘வோக்கி டோக்கி’ அலைபேசி முறைமையை அறிமுகப்படுத்தவுள்ளது.

பயணிகளின் வசதிக்காக இரண்டு வாரங்களில் புதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கொழும்பின் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, அனைத்து தனியார் பேருந்துகளிலும் குளோபல் பொசிஸினிங் சிஸ்டம் (ஜிபிஎஸ்) பொருத்தப்பட உள்ளது.

இந்தநிலையில் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக உணரும் பயணிகள் பேருந்துக்குள் பொருத்தப்பட்டுள்ள பொத்தானை அழுத்துவதன் மூலம் அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது தேசிய போக்குவரத்து ஆணையத்தில் தங்கள் முறைப்பாடுகளை தெரிவிக்கலாம்.

இது துன்புறுத்தல்கள், திருட்டுகள், வேகம், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், நடத்துனர்கள் மற்றும் சாரதிகளின் தவறான நடத்தை மற்றும் பேருந்துகளில் நடக்கும் பல்வேறு சட்டவிரோத செயல்களைக் குறைக்க உதவும்.

அத்துடன் பயணிகளுக்கு சுதந்திரமான பாதுகாப்பான மற்றும் வசதியான பயண அனுபவத்தை இது கொடுக்கும் என்றும் கெமுன விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து...

சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...