கொரோனா காரணமாக இவ்வாண்டு, இலங்கை பாரிய பல சவால்களுக்கு முகம் கொடுக்கும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
உணவுப் பற்றாக்குறை, வெளிநாட்டு நாணய கையிருப்பு மற்றும் வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்துதல் ஆகியவை இலங்கைக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டின் உலக பொருளாதார நிலைமை குறித்து ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரம் தொடர்பான அமைப்பின் அறிக்கையில் சர்வதேசம் எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் மத்திய வங்கிகள் கடந்த ஆண்டின் இரண்டாம் அரையாண்டு பகுதியில் வட்டி விகிதத்தை அதிகரித்தன.
மேலும் தடுப்பூசியினை 64 சத வீதமான இலங்கை, பூட்டான் மற்றும் மாலைதீவுகள் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் பெற்றுள்ளதாகவும் ஐக்கிய நாடுகளினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SrilankaNews
Leave a comment