துமிந்த ஜனாதிபதி
அரசியல்இலங்கைசெய்திகள்

துமிந்தவுக்கான ஜனாதிபதி பொதுமன்னிப்பு இடைநிறுத்தம்! – உயர்நீதிமன்றம் அதிரடி

Share

ராஜபக்சக்களின் நெருங்கிய சகாவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர். துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்‌ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நான்கு பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் 11ஆவது மரணதண்டனைக் குற்றவாளியான ஆர்.துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் வௌியிடப்பட்ட உத்தரவை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் அவரது தாயார் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் கடந்த வருடம் ஜுலை மாதம் 21ஆம் திகதி மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுவை ஆராய்ந்ததன் பின்னரே உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Missing Persons Nuwara Eliya
இலங்கை

நிலவும் சீரற்ற காலநிலையால் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று மாலை நேர நிலவரப்படி 581 குடும்பங்களைச்...

Displaced
இலங்கை

நுவரெலியாவில் தொடரும் கனமழை – தற்காலிக முகாம்களில் தஞ்சம் கோரிய மக்கள்.

நுவரெலியாவில் சீரற்ற வானிலை காரணமாக, பல தாழ்நில பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன், மரங்களும் முறிந்து விழுந்துள்ளதாக...

Ministry of Defence
இலங்கை

பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அவசர அறிவித்தல்.

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு தொடர்புடைய அதிகாரிகளுக்கு...

Electricity bills
இலங்கை

மின்சார கட்டணம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, 2026 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களில் எவ்வித...