நாட்டில் பல மாதங்களாக மின்சார கட்டணம் செலுத்தாதோருக்கு சிவப்பு பட்டியல் அனுப்பப்பட்ட போதிலும் தொடர்ந்தும் கட்டணம் செலுத்தாவிடின் மின் விநியோகம் இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக நாட்டில் அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கால் ஏற்பட்ட வருவாய் இழப்பைக் கருத்தில் கொண்டு மின்சாரக் கட்டணம் செலுத்துவதற்கு சில நிவாரணங்கள் அரசால் வழங்கப்பட்டது.
ஆனால் மாதாந்த கட்டணத்தை செலுத்தக்கூடியவர்கள் கூட அதைத் தொடர்ந்து செலுத்தவில்லை.
மேலும் கடந்த சில மாதங்களாக அவ்வப்போது மின்கட்டணம் செலுத்திய வாடிக்கையாளர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படாது.
தொடர்ந்து மின்கட்டணம் செலுத்தாதவர்கள், செலுத்த தயக்கம் காட்டினால் தற்காலிகமாக மின் இணைப்பை துண்டிக்க வேண்டும்.
இருப்பினும் மின்சாரத்தை துண்டிப்பதற்கு முன்னர் சிவப்பு பட்டியல் வழங்கப்படும் எனவும் அதற்கும் மின்கட்டணம் செலுத்தாவிடின் மின்துண்டிப்பு செய்யப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment