Untitled
இலங்கைசெய்திகள்

மீண்டும் கோழி இறைச்சி, முட்டை விலை உயர்வு!!

Share

மின் கட்டணம், நீர் கட்டணம் மற்றும் வரி அதிகரிப்பு காரணமாக கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையை மீண்டும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கம் தலையிட்டு சலுகைகளை வழங்கினால் விலையை குறைக்க முடியும் என சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர கூறினார்.

“இந்த மாதம் முதல் நீர் கட்டணம், மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. கோழிப்பண்ணைத் தொழில் நீர் மற்றும் மின்சாரத்தை அதிகம் பயன்படுத்துகிறது. இந்த அதிகரிப்புடன், வற் வரி 12% இல் இருந்து 15% ஆக அதிகரித்துள்ளது. புதிய பாதுகாப்பு வரி 2.5% விதிக்கப்பட்டுள்ளது. இது இறுதி உற்பத்திக்கு சுமார் 7.5% அதிகரிக்கலாம்.

அனைத்து சூழ்நிலைகளிலும், உற்பத்திச் செலவைப் பொறுத்து கோழி இறைச்சியின் விலை உயரும் வாய்ப்புள்ளது. இது குறித்து அமைச்சரிடம் திங்கட்கிழமை விவாதிப்போம். குறிப்பாக முட்டையின் கட்டுப்பாட்டு விலையில் இருந்து விடுபடுவது எப்படி என கலந்துரையாடுவோம்.

தற்போது 50% உற்பத்தியாளர்கள் முட்டையின் கட்டுப்பாட்டு விலையால் இத்தொழிலை விட்டு வெளியேறியுள்ளனர். முட்டையிடும் விலங்குகள் கூட இறைச்சிக்காக சந்தைப்படுத்தப்படுகின்றன என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...