Ministry of Education Northern Province
இலங்கைசெய்திகள்

சுகயீன விடுப்பு போராட்டம் – நாளைய பரீட்சைகள் ஒத்திவைப்பு!

Share

ஆசிரியர்கள், அதிபர்கள் சுகயீன விடுப்பு போராட்டத்தை நடத்த உள்ளதனால் நாளை நடைபெறவிருந்த பரீட்சைகளை வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் ஒத்திவைத்துள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலமைக்கு தீர்வாக பாடசாலை மாணவர்களை அவர்களது வீட்டிற்கு அருகில் உள்ள பாடசாலைக்கு அனுப்புமாறும் ஆசிரியர்களை அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள பாடசாலைகளில் இணைத்துக்கொள்ளுமாறும் கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்தும் ஆசிரியர்கள், அதிபர்கள் நாளை சுகயீன விடுப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

இந்த நிலையில் வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் 2021ஆம் ஆண்டு தரம் 6,7 மற்றும் 8 ஆகிய மாணவர்களுக்கான மூன்றாம் தவணை பரீட்சை நடத்தப்பட்டு வருகிறது.

எனினும் நாளை ஏப்ரல் 25ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவிருந்த பரீட்சைகள் வரும் 27ஆம் திகதி புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

எனினும் கடந்த 20ஆம் திகதி நடைபெறவிருந்த பரீட்சை நாளைமறுதினம் ஏப்ரல் 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அன்றைய தினம் நடைபெறும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
sl pass port
இலங்கை

போலியான கடவுச்சீட்டு – பிரித்தானியாவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்!

நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்றைய தினம் நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும் போது, முன்னாள் நாடாளுமன்ற...

arested
இலங்கை

மெகசின் சிறைச்சாலைக்கு அருகில் கைதான நபர்கள் – விசாரணையில் வெளியான அதிர்ச்சித்தகவல்கள்!

இன்று பிற்பகல், மெகசின் சிறைச்சாலையின் பக்கவாட்டுச் சுவருக்கு அருகே நடத்தப்பட்ட சோதனையின் போது கைதிகளுக்கு போதைப்பொருள்...

Srilankan Airlines
இலங்கை

மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது குவைத்திற்கான விமான சேவை.

இன்று பிற்பகல் முதல், கொழும்புக்கும் குவைத்திற்கும் இடையிலான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

tf
இலங்கை

அனுமதி பத்திரமின்றி இயங்கிய டின் மீன் தயாரிப்பு நிறுவனம் முற்றுகை .

பன்னல, எலபடகம பகுதியில், இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் (SLSI) செல்லுபடியாகும் உரிமம் இன்றி இயங்கி வந்த...