Jaffna
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கலாசாரங்களை பிரதிபலிக்கும் வகையில் இடம்பெற்ற பொங்கல்

Share

சர்வதேச இந்து பௌத்த ஒற்றுமைக்கான அமைப்பும் யாழ் நண்பர்கள் அமைப்பும் இணைந்து நடத்திய பொங்கல் விழா இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இன்று காலை 10 மணியளவில் நல்லை ஆதின மண்டபத்துக்கு முன்பாக இடம்பெற்ற பொங்கல் விழாவுக்கு விருந்தினர்கள் நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக இருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

இதன்போது பல்வேறு கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வகையில் கண்டிய நடனம்,பொய்க்கால் குதிரையாட்டம் மயிலாட்டம், நாதேஸ்வர மேளதாளங்கள் முழங்க விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டனர்.

Jaffna 3

இந்நிகழ்வின் போது பொங்கல் பானையில் விருந்தினர்களால் அரிசி போடப்பட்டதுடன் மங்கள விளக்கேற்றல் நிகழ்வு பெளத்த பாரம்பரிய முறைப்படி கண்டிய மேள தாளங்கள் முழங்க நடைபெற்றது.

இதன்போது வட மாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், நாகவிகாரை விகாராதிபதி சிறீவிமல தேரர் , நல்லை ஆதீன குருமுதல்வர் சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள், மறவன்புலவு சச்சிதானந்தன், வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் மற்றும் மதத்தலைவர்கள் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Jaffna 01

நிகழ்வுகளின்போது இராணுவம் மற்றும் பொலிசாரால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு காணப்பட்டதுடன் நிகழ்வு மண்டபத்தின் பெரும்பாலான ஆசனங்கள் வெறுமையாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...