9 15
இலங்கைசெய்திகள்

அநுர அரசின் அதிரடி – வெளிநாட்டில் சுற்றிவளைக்கப்படும் மற்றுமொரு குழு – கலக்கத்தில் 25 பேர்

Share

அநுர அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கையால் வெளிநாடுகளில் பதுங்கியுள்ள இலங்கையை சேர்ந்த குற்றவாளிகள் கலக்கத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் வெளிநாடுகளில் பதுங்கியுள்ள இலங்கையை சேர்ந்த சுமார் 25 குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்டர்போல் அதிகாரிகள் இலங்கை பொலிஸாருக்கு உதவிவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து டுபாய் மற்றும் இந்தியாவில் பதுங்கியுள்ள இலங்கை குற்றவாளிகள் தங்கள் இருப்பிடங்களை மாற்றத் தொடங்கியுள்ளனர்.

எனினும், அவர்கள் வேறு நாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க இன்டர்போல் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸாருக்கு மிகவும் அவசியமாக உள்ள 25 குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய தேவையான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இலங்கை புலனாய்வு துறையின் நேர்த்தியான செயற்பாடு காரணமாக, வெளிநாடுகளில் பதுங்கியிருந்த குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 18 பேர் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவர்கள் பாதாள உலகக்குழு மற்றும் போதைப்பொருள் வலையமைப்புடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...

MediaFile 13
செய்திகள்இலங்கை

நாடே ஒன்றாக: 3 மாதங்களில் 77,000 பேர் கைது! ஒரு டன்னுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் மீட்பு!

இலங்கை காவல்துறையினரால் முன்னெடுக்கப்படும் நாடே ஒன்றாக எனும் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் கீழ், கடந்த...

24 6681fb25b3e29
செய்திகள்அரசியல்இலங்கை

கோட்டாபயவின் பாதையில் தற்போதைய அரசு: கல்வியில் இனவாதம் என சாணக்கியன் சாடல்!

தற்போதைய அரசாங்கத்தின் நகர்வுகள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் நிர்வாக முறையை ஒத்திருப்பதாக இலங்கை தமிழரசுக்கட்சியின்...