செய்திகள்இலங்கைபிராந்தியம்

அறநெறிப் பாடசாலைகளில் நூலகம் அமைக்கும் திட்டம்!

Arumuga02
Share

நாவலரின் 200வது நூற்றாண்டினை முன்னிட்டு அறநெறிப் பாடசாலைகளில் நூலகம் அமைக்கும் திட்டம் யாழில் ஆரம்பமானது.

நல்லூர் நாவலர் ஞாபகார்த்த மண்டபத்தில் குறித்த நிகழ்வினை ஆரம்பித்து வைத்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது பிரதமரின் இந்து மத விவகார அலுவலருக்கான இணைப்பாளர் பாபு சர்மா மேற்கண்டவாறு தெரிவித்தார்

ஆறுமுக நாவலர் பெருமானின் 200வது நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு இலங்கை பிரதமரின் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடுபூராகவும்,

Arumuga

அறநெறிப் பாடசாலைகளில் 100 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு நூலகம் அமைக்கும் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்து கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் உமா மகேஸ்வரன் ஏற்பாட்டில் பிரதமரின் இணைப்புச் செயலாளர் கீதா நாத் காசிலிங்கம், நந்திக்கொடி அகில இலங்கை இந்து மாமன்ற தலைவர் தனபாலா மற்றும் ஏனைய பிரமுகர்கள் கலந்துகொண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Arumuga 01

இன்றைய நிகழ்வில் நாவலர் பெருமானின் அந்த புரட்சிகரமான சைவ சமயத்துக்கு அவர் ஆற்றிய நன்றி தெரிவிக்கும் முகமாக இந்த நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன

இந்த வகையில் எமது பிரதமரின் அறிவித்தலின் மூலம் 200 ஆவது நூற்றாண்டு விழாவுக்கு ஒரு அவர் ஞாபகார்த்தமாக முத்திரை வெளியீடு செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை பூராகவும் நாவலரின் 200 ஆவது நூற்றாண்டு விழா கொண்டாடுவதற்காக சகல ஏற்பாடுகளையும் இந்து கலாசார திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...