rtjy 268 scaled
இலங்கைசெய்திகள்

மாவீரர் நினைவேந்தலுக்கு கப்பம் கோரிய நபருக்கு விளக்கமறியல்

Share

மாவீரர் நினைவேந்தலுக்கு கப்பம் கோரிய நபருக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பு – வாழைச்சேனையில் சக உறவினர் ஒருவரிடம் மாவீரர் தின நினைவேந்தலுக்கு 15 இலட்சம் ரூபாவை கப்பமாக தரவேண்டும் கோரிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் எதிர்வரும் 11ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று(28.11.2023) உத்தரவிட்டுள்ளார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள குறுவாக்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு 2021 ம் ஆண்டு அதிஷ்ட லாபச் சீட்டின் மூலம் 10 கோடி ரூபா பணப்பரிசு கிடைத்துள்ளது.

இதனையடுத்து குறித நபரிடம் அவரின் மனைவியின் உறவினரான மச்சான் முறையான நபர் தான் பாதுகாப்புக்கு இருப்பதாகவும் அதிஷ்டலாபச் சீட்டின் மூலம் கிடைத்த பணத்தில் தனக்கும் பணம் தருமாறு நீண்டகாலமாக அவருக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (27.11.2023) அதிஷ்டலாபச் சீட்டின் மூலம் பணம்கிடைத்த உறவினரிடம் சக உறவினர் மாவீரர் தின நினைவேந்தலுக்கு 15 இலட்சம் ரூபாவை கப்பமாக கோரியுள்ளமை தொடர்பில் அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து கப்பம் கோரிய நபரை கைது செய்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 41 வயதுடையவரை வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலைப்படுத்தியதையடுத்து அவரை எதிர்வரும் 11ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Share
தொடர்புடையது
dengue 1
இலங்கை

அறிகுறிகள் தென்பட்டால் ஆபத்து – உடனடியாக வைத்தியசாலையை நாடவும்.

டெங்கு அறிகுறிகள் தென்படுவோர் தாமதிக்காது உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு...

chemmani Mass grave
இலங்கை

செம்மணிக்கு செல்ல ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவிற்கு நீதிமன்றம் பச்சைக்கொடி.

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை...

ஜி.எல். பீரிஸ்
இலங்கை

ஜெனீவாவில் இலங்கைக்கு இதுவும் நடக்கலாம் – எச்சரிக்கும் ஜி.எல். பீரிஸ்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது. அங்கு...

Srilankan Airlines
இலங்கை

நிறுத்தப்பட்டது இலங்கை விமான போக்குவரத்து – இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை.

மீண்டும் மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச்சூழல் காரணமாக, குவைத் நாட்டிற்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான...