பெரும் போகத்துக்கு சேதன உரம் மற்றும் இயற்கை கனிமங்கள், தாவர ஊட்டற் பதார்த்தங்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே விவசாய அமைச்சர் வழங்கிய யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி நெற்செய்கைக்கு தேவையான சேதன உரம் அரச உர நிறுவனத்தால் இறக்குமதி செய்தல் மற்றும் ஏனைய பயிர்களுக்கு அனுமதிப்பத்திரம் கொண்ட உர நிறுவனங்களால் தேவையான சேதன உரங்களை இறக்குமதி செய்து போட்டி விலை மனு கோரல் அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்குதல் என்பவற்றுக்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment