சரத் பொன்சேகா
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டா அரசை விரட்டியடிக்கும் மக்கள் போராட்டம்! – பொன்சேகா ஆரூடம்

Share

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனக் கோரி இரவு பகல் பாராது மக்கள் போராடி வருகின்றனர்.

ஆனால், ஜனாதிபதியும், அரசும் பதவி விலகாமல் அதிகாரத் திமிருடன் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இது அவர்களுக்கு வெட்கக்கேடான செயலாகும்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கொழும்பு, காலிமுகத்திடலில் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்ச்சியாகப் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. இது தொடர்பில் பொன்சேகா எம்.பி. கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தனக்கு 69 இலட்சம் மக்களின் ஆணை கிடைத்தது என்ற இறுமாப்புடன் ஜனாதிபதி கோட்டாபய பதவியில் அமர்ந்திருக்கின்றார். அதேவேளை, தமக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உண்டு என்ற திமிருடன் அரசு செயற்படுகின்றது. ஆனால், தற்போது நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையைக் கூட இந்த அரசு இழந்துவிட்டது. அதேவேளை, ஜனாதிபதிக்கு ஆணை வழங்கிய மக்களும் இன்று அவருக்கு எதிராகக் களமிறங்கிப் போராடி வருகின்றனர்.

பதவி ஆசையில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், மக்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்கமாட்டார்கள். மக்களின் எதிர்ப்புப் போராட்டங்கள் அவர்களுக்குத் தூசு போல் தென்படலாம்.

ஆனால், நாளாந்தம் வலுப்பெறும் மக்கள் போராட்டங்கள், ஜனாதிபதியையும் அரசையும் விரைவில் வீட்டுக்கு விரட்டியடிக்கும்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
11 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் சரிவு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் உலகளாவிய பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில், சர்வதேச சந்தையில்...

10 14
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி: அரசு அதிரடி சிக்கன நடவடிக்கைகள் அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதாரப்...

09 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல மாகாணங்களில் இன்று பிற்பகல் 2:00...

08 14
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போதைப்பொருள் பணத்தில் சொத்துச் சேகரிப்பு: 4 கோடி ரூபாய் பெறுமதியான வீடு மற்றும் சொத்துக்கள் முடக்கம்!

போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி சொத்துக்களைச் சேர்த்த குற்றச்சாட்டில், சந்தேகநபர் ஒருவரின்...