3 2
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டாவின் வீடு முன் வெடித்தது மக்கள் போராட்டம்! – பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம்

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நுகேகொடை – மிரிஹான – பெங்கிரிவத்தை இல்ல வீதியை இன்று மாலை சுற்றிவளைத்த மக்கள் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராகவும், அரசின் தவறான நிர்வாகத்துக்கு எதிராகவும் மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பொலிஸாரின் தடையைத் தகர்த்தெறிந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னேறிச் சென்றனர்.

இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டனர்.

மக்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் விசேட அதிரடிப் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
dead body
இலங்கை

பாடசாலை செல்லும்போது ஆறு வயது பாலகிக்கு நேர்ந்த கதி.

இன்று, மாத்தறை, திக்வெல்ல – கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் தனது தாயார்...

Lanka Turkey
இலங்கை

துருக்கித் தூதுவரை சந்தித்த சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் சர்வஜன அதிகார கட்சியின்...

Fire Breaks Out Factory In Katuwana
இலங்கை

அடையாளம் காணப்பட முடியாத வகையில் உடலங்கள் – ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் தீ.

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்...

Basil Rajapaksa
இலங்கை

கடும் எச்சரிக்கையுடன் பசில் ராஜபக்சவுக்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக, மாத்தறை எளியகந்த பகுதியில் உள்ள ஒன்றரை...