sajith 3
இலங்கைசெய்திகள்

மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்துகின்ற ஊடக கட்டமைப்பு தேவை

Share

மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்துகின்ற ஊடக கட்டமைப்பு தேவை

ஒவ்வொரு பிரதேசத்திலும் கீழ்மட்டத்திலிருந்து ஊடக வலையமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும்.

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வெளியிடப்படுகின்ற சிங்கள மொழியிலான “பலவேகய”,தமிழ் மொழியிலான “ஐக்கிய குரல்”பத்திரிகையின் மின்னிதழ் அதனோடிணைந்த ஒன்றித்த இணையதள அங்குரார்பண நிகழ்வில் நேரலையாக கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் காணப்படுகின்ற சம்பிரதாய ஊடக வழிமுறைகளுக்கு அப்பால் சென்ற மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்துகின்ற, நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தாக, பொய்யை உருவாக்காத உண்மையையையும் அறிவியலையும் அடிப்படையாகக் கொண்ட தகவல் பறிமாற்ற வலையமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

நாட்டில் தற்போது காணப்படுகின்ற சில ஊடகங்கள் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் ஏமாற்றுகின்ற திசை திருப்புகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு பிரதேசத்திலும் கீழ்மட்டத்திலிருந்து ஊடக வலையமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும்

சில தரப்பினர் பொய்யான தகவல்களைக்கூறி மக்களைத் தவறாக வழிநடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். ஆனால் நாம் அதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.

அத்துடன் இந்த ஆரம்பகட்ட முயற்சியுடன் இணைந்ததாக கிராமிய மட்டங்கள்தோறும் சரியான தகவல்களை வழங்கக்கூடிய ஊடகக்கட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்று குறிப்பிட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...