அரச பணியாளர்கள்
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அத்தியாவசியமான அரச பணியாளர்கள் மாத்திரம் இன்று கடமைக்கு!

Share

அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான பணியாளர்கள் தவிர்ந்த ஏனைய அரச பணியாளர்கள் இன்று கடமைக்குச் சமுகமளிக்க வேண்டிய அவசியமில்லை என்று பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

எனினும், அவசர மற்றும் அத்தியாவசிய கடமைகளுக்காக, நிறுவனப் பிரதானியால் பணியாளர்களை சேவைக்கு அழைப்பதற்குத் தடை இல்லை என்றும் அந்த அமைச்சு அறியப்படுத்தியுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து சிக்கல் நிலை என்பனவற்றைக் கருத்தில்கொண்டு, அரசு இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றில் அறிவித்தல் ஒன்றை வெளியிட்ட நிலையில், அது குறித்த சுற்றறிக்கையை அரச சேவைகள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி வெளியிட்டுள்ளார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
body 4
இலங்கை

குளியலறையில் மீட்கப்பட்ட சடலம் – தொடரும் விசாரணைகள்.

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண்...

Fire Breaks 1
இலங்கை

கொழும்பில் மாத்திரம் இத்தனை தீ விபத்துக்களா?

ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து...

பசில்
இலங்கை

பசில் விவகாரம் – சர்வதேச காவல்துறையினை நாடும் நீதித்துறை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, அமெரிக்காவில் உள்ள நிலையில் அமெரிக்க நீதிமன்ற உத்தரவுகளின் பிரகாரம் நாட்டிற்கு...

body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...