கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுதல் தொடர்பான தீர்மானம் ஒரு வார காலத்துள் மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் மற்றும் கொரோனா தொற்று காரணமாக நடத்தி முடிக்காமல் போன அழகியல் பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சை பெறுபேறுகள் தாமதம் காரணமாகவே க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தாமதமடைகின்றன.
இந்த நிலையில் அழகியல் பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சை பெறுபேறுகள் இன்றி க.பொ.த. சாதாரணப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடும் சாத்தியங்கள் குறித்து கல்வி அமைச்சு ஆராய்கின்றது.
எனவே இது தொடர்பில் இறுதித் தீர்மானம் விரைவில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அழகியல் பாட செயன்முறைப் பரீட்சை பெறுபேறுகள் இன்றி க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படுவதால் பிரச்சினைகள் தோன்றும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 Comment