images 3 2
இலங்கைசெய்திகள்

மாகாண சபைத் தேர்தல் விரைவில்: 2026 வரவு செலவுத் திட்டம் மக்கள் நலன் சார்ந்ததாக அமையும் என எதிர்பார்ப்பு

Share

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு, மாகாண சபைத் தேர்தலை இயலுமானவரை விரைவில் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது.

இந்த இலக்கை நோக்கிய ஒரு முக்கிய நகர்வாக, அரசு 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை மக்கள் நலன் சார்ந்த பாதீடாக முன்வைக்க அவதானம் செலுத்தி வருகிறது. மக்களுக்கு நேரடியாகத் தாக்கம் செலுத்தும் விதத்தில் புதிய வரிகள் எதுவும் அமுல்படுத்தப்படமாட்டாது எனத் தெரியவருகிறது.

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பாதாள குழுக்கள் ஒடுக்கல் போன்ற செயற்பாடுகளால் மக்கள் மத்தியில் அரசுக்கு ஏற்பட்டுள்ள ஆதரவை ஒரு சாதகமான வாய்ப்பாகக் கருதி, விரைவில் தேர்தலுக்குச் செல்வதற்கு அரசு எதிர்பார்ப்பதாக அறியப்படுகிறது.

இதற்கிடையில், மாகாண சபைத் தேர்தல் தொடர்பான முடிவை எடுப்பதற்காக, வரவு செலவுத் திட்டக் கூட்டத் தொடருக்கு மத்தியில் சர்வ கட்சித் தலைவர்கள் கூட்டத்தையும் ஜனாதிபதி நடத்தவுள்ளார்.

இந்தக் கூட்டத்தின் நோக்கம், எந்த முறையில் தேர்தலை நடத்துவது என்பது குறித்து ஒரு உறுதியான முடிவை எடுப்பதேயாகும் என்று தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...