images 1 9
செய்திகள்இலங்கை

கென்யாவில் சிறிய ரக விமானம் விபத்து: 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

Share

கென்யாவின் கடற்கரைப் பகுதியிலிருந்து பயணித்த ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து ஆணையம் (Kenya Civil Aviation Authority) தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

 

சுற்றுலாத் தலமான டயானியிலிருந்து, மாசாய் மாரா தேசியப் பூங்காவில் அமைந்துள்ள கிச்வா டெம்போ (Kichwa Tembo) என்ற தனியார் விமான ஓடுபாதைக்குச் செல்லும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

 

நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை உள்ளூர் நேரப்படி 5:30 மணியளவில் (0230 GMT) விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்துக்கான காரணத்தை நிறுவ, அரசு நிறுவனங்கள் ஏற்கனவே சம்பவ இடத்தில் இருப்பதாகவும், மேலதிக விவரங்களைத் தற்போது தெரிவிக்க முடியாது என்றும் விமானப் போக்குவரத்து ஆணையகம் கூறியுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம், மருத்துவ அரசு சாரா நிறுவனமான அம்ரெஃப் (AMREF)-க்கு சொந்தமான ஒரு இலகுரக விமானம் தலைநகர் நைரோபியின் புறநகரில் விபத்துக்குள்ளானது. அந்தச் சம்பவத்தில் ஆறு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இரண்டு பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
death body
இலங்கை

கருங்குளவிக்கொட்டுக்கு இலக்கான முதியவர் மரணம்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 10ஆம் வட்டாரம், பகுதியினை சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் என்ற 67 வயதான...

mervin silva031
இலங்கை

வங்கி கணக்குகளில் மட்டும் இத்தனை கோடிகளா – மேர்வின் சில்வாவினால் இன்னும் பலருக்கு தலைவலி!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள 600...

fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...