IMG 20230521 WA0074 1
இலங்கைசெய்திகள்

நீதிமன்ற தீர்ப்பிற்கு முரணாக நடந்தவர்களுக்கு முன்னிலையாகுமாறு அறிவித்தல்!

Share

நீதிமன்ற தீர்ப்பிற்கு முரணாக நடந்தவர்களுக்கு முன்னிலையாகுமாறு அறிவித்தல்!

சாவகச்சேரி நீதிமன்றினால் வழங்கப்பட்ட தீர்ப்பினை வலிதற்றதாக்கும் விதத்திலும் அதற்கு முரணான வகையில் நடந்து கொள்வதாக தெரிவித்து சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் செ.மயூரன், சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர், பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் திலகராணி ஆகியோரை இன்றையதினம் திங்கட்கிழமை சாவகச்சேரி நீதிமன்றில்  முன்னிலையாகுமாறு நீதிமன்றத்தால் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 12ஆம் தேதி தனியாரால் அபகரிக்கப்பட்ட தாவளை இயற்றாலை ஊரெல்லை வீதியை மீட்டுத் தருமாறு கோரி சாவகச்சேரி பிரதேச சபைக்கு முன்பாக கிராம மக்களோடு இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தை அடுத்து சாவகச்சேரி பிரதேசபை கொடிகாமம் பொலிஸாரோடு இணைந்து பிரதேச சபையில் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் தனியாரால் அபகரிக்கப்பட்டிருந்த குறித்த வீதியை அளவீடு செய்து எல்லை வேலிகளை அகற்றி பொதுமக்கள் பாவனைக்காக திறந்து விட்டிருந்தனர்.

இந்நிலையிலேயே தனியாரால் சாவகச்சேரி நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்து போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களை நீதிமன்றத்திற்கு அழைத்துள்ளனர்.

18.01.2021 ஆம் திகதி சாவகச்சேரி நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பினை வலிதற்றதாக்கும் விதத்திலும் அதற்கு முரணான வகையிலும் சேயற்பட்டதாக தெரிவித்து அது தொடர்பாக ஆராய்வதற்காக நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...