20230417 144047 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

வடக்கு கிழக்கு தழுவிய கதவடைப்பு போராட்டம்!

Share
பௌத்தமயமாக்கலுக்கு எதிராகவும்பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராகவும் ஏப்ரல் 25ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் முழுமையான கதவடைப்பு போராட்டத்தை நடத்த தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ் கட்சிகளுக்கிடையில் யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டது.
இன்று திங்கட்கிழமை(17) யாழ்ப்பாணம் கல்வியங்காட்டிலுள்ள, ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் இல்லத்தில் குறித்த சந்திப்பு நடந்தது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரே்ஷ் பிரேமச்சந்திரன், ஜனநாயக போராளிகள் கட்சியினர், தமிழ் தேசிய கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இன்றைய சந்திப்பில் கலந்து கொண்டனர்.
எதிர்வரும் 25ஆம் திகதி பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது. இதனால், அன்றைய தினத்தில் வடக்கு கிழக்கு தழுவிய கதவடைப்பை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தார்.
#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...

ordinary
இலங்கை

வரலாற்று சாதனை படைத்த இலங்கை மருத்துவர்கள்!

  கண்டி, பேராதனை போதனா வைத்தியசாலையில் வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது. இடுப்புப் பகுதியில் இணைந்திருந்த இரட்டையர்களை...

veppam 1
இலங்கை

வடக்கு கிழக்கிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவான ‘வெப்பக் குறியீடு’, இன்று பகல் வேளையில் குறிப்பிட்ட சில...

sri lankas president
இலங்கை

மீண்டும் சந்தித்த கோட்டா மற்றும் ரணில்!

முன்னாள் ஜனாதிபதிகளாக கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் கொழும்பில்...