rtjy 208 scaled
இலங்கைசெய்திகள்

கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழ் அரசுக் கட்சி ஆதரவு

Share

கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழ் அரசுக் கட்சி ஆதரவு

எதிர்வரும் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு – கிழக்கில் பூரண கடையடைப்பு செய்யுமாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் அனைத்து மக்களையும் கேட்டுக்கொள்கின்றோம் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அறிக்கையூடாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடக்கு – கிழக்கு கடையடைப்பு போராட்டம் தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அறிக்கையில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாக இருந்த ரி.சரவணராஜா தனது நீதித்துறை கடமைகளைச் செய்த காரணத்தால் அச்சுறுதலுக்கு உள்ளாக்கப்பட்டு பதவி விலகல் செய்து நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டதை எதிர்த்து அனைவரையும் ஒன்று திரள வேண்டும்.

அத்துடன், இந்தக் கடையடைப்பு நடவடிக்கை மூலம் தமிழ் நீதிபதி ஒருவருக்கு நிகழ்ந்த இந்த மிக மோசமான செயற்பாட்டை திரும்பத் திரும்ப உலகுக்கு எடுத்தக் காட்ட நாம் கடமைப்பட்டுள்ளோம்.

ஆகவே. இது சம்பந்தமாக அனைவரினது ஒத்துழைப்பையும் முழுமையாக எதிர்பார்க்கின்றோம் என்று சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...