power cut 2
இலங்கைசெய்திகள்

இரவில் மின்வெட்டு இல்லை?

Share

டிசம்பர் மாதம் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலங்கை எதிர்பார்த்துள்ளது.

இதனால் சுற்றுலா வலயங்களில் இரவு நேர மின் துண்டிப்பை தவிர்க்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

இதுவரையில் , ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களுக்காக, அதிக எண்ணிக்கையிலான ஹோட்டல்களில், முன்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பாக அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ மேலும் தெரிவிக்கையில், சுற்றுலாத் துறை எதிர்கொள்ளும் பெரும் பிரச்சினையாக மின் துண்டிப்பு காணப்படுகின்றது.

இலங்கையில் 49 வலயங்கள் சுற்றுலா வலயங்களாக பெயரிட்டு வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம். அவற்றில் இதுவரை 14 வலயங்கள் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பெயரிடப்பட்டுள்ளன.

அத்துடன், இந்த பிரதேசங்களுக்கு இரவு நேரங்களில் மின்வெட்டை தவிர்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.இது வரவேற்கத்தக்க ஆரம்பமாக நாம் இதனை நினைக்கின்றோம். ஏனென்றால் டிசம்பர் மாதம் இலங்கைக்கு பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்ற ஒரு பரபரப்பான மாதமாக மாறும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த...

heavy rain
இலங்கை

நோர்ட்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் படி, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நுவரெலியா –...