1759803512
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

போதைக்கு அடிமையான யாழ்ப்பாண யுவதி தற்கொலை முயற்சி; சிகிச்சை பலனளிக்காமல் மரணம்!

Share

யாழ்ப்பாணம், சாவகச்சேரி காவல்துறை பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியைச் சேர்ந்த கலியுகவரதன் சுருதி (வயது 20) என்ற யுவதி, போதைக்கு அடிமையானதால் எடுத்த தவறான முடிவின் காரணமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த யுவதியும் அவரது காதலனும் போதைக்கு அடிமையானவர்கள் எனத் தெரியவருகிறது.

இவர் கடந்த ஒக்டோபர் 15ஆம் திகதி தனக்குத் தானே தீ வைத்துக் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை அணைத்த காதலன், அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தார்.

எனினும், சிகிச்சை பலனளிக்காமல் குறித்த யுவதி நேற்றைய தினம் (அக் 20) உயிரிழந்துள்ளார்.

சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சாட்சிகளைச் சாவகச்சேரி காவல்துறையினர் நெறிப்படுத்தினர்.

Share
தொடர்புடையது
fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

death body
இலங்கை

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பட்டதாரி இளைஞர் பலி!

காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப்...

சுகீஸ்வர பண்டார 1
இலங்கை

இன்றைய நாளில் சுகீஸ்வர பண்டாரவிற்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்...