பால் மாவின் விலை அதிகரிப்பு காரணமாக, பால் தேநீர் விற்பனையை இடைநிறுத்துவதற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இவ்வாறு இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உணவகங்களில் டின் பாலைப் பயன்படுத்தி பால் தேநீர் தயாரிக்க உத்தேசித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பால் மாவின் விலை மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், ஒரு கோப்பை பால் தேநீரின் விலையும் அதிகரிக்கப்பட்டால் பொதுமக்களுக்கு மேலும் சுமை ஏற்படும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ பால் மா பொதியின் விலையை 150 ரூபாவாலும், 400 கிராம் பொதியின் விலையை 60 ரூபாவாலும் உயர்த்துவதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
#SrilankaNews
Leave a comment